NobleBlocks

Research indexJournal article

சவவலககய மழபயரபபகள

Shanlax

Zenodo (CERN European Organization for Nuclear Research)14 May 2025Open access

NobleIDark:/48914/w1/20260524/309BA195DOI10.5281/zenodo.15394665

Free to read at the publisher

You can read the abstract here, or the full text at the publisher.

Read at the publisher

Abstract

“உலகம்” என்ற சொல் தமிழில் தொல்காப்பியர் காலத்திலிருந்தே வழக்கில் இருந்து வந்துள்ளது. கம்பராமாயணம், பெரியபுராணம் போன்ற நூற்களை “உலகம்” என்ற சொல் தொடங்கி வைக்கிறது. உலகம் என்ற சொல் தமிழ் மரபில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அது விஞ்ஞானம் உச்சம் தொட்ட நவீன காலத்தில்தான் முழுமையான அர்த்தத்தை அடைந்தது.விஞ்ஞானம் உலகத்தைச் சுருக்கி விட்டது. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், நாடு தாண்டிய பயணங்கள், பிறநாட்டு வேலைவாய்ப்பு, தகவல் தொடர்பு சாதனங்கள், ஆங்கிலம் என்ற இளைய மொழியின் ஆதிக்கம் இவற்றோடு மொழிபெயர்ப்புச் செயல்பாடுகள் உலகைச் சுருக்கிவிட்டன எனலாம். மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் ஒரு பகுதியானபின் குறுகிய கண்ணோட்டங்களும், தட்டையான மனோபாவங்களும் மாறத்தொடங்கின. எனது இலக்கியம்தான் உயர்ந்தது, எனது மொழிதான் வளமையானது போன்ற ஆணவச் சொல்லாடல்கள் வெறி கோŒங்களாக மாறிவிட்டன. காலனியம் நாகரீகப்படுத்தல் என்ற பெயரில் பல அநாகரீகங்களை நிலைநிறுத்திச் சென்றாலும், அது விட்டுச் சென்ற ஆங்கிலம் உலகம் முழுக்க புதிய திறப்புகளைச் சிந்தனை தளத்தில் உருவாக்கியது. புதிய முன்னெடுப்புகளையும் புதிய திறனா#வுக் கோட்பாடுகளையும் உள்வாங்கிக்கொண்டு எழுதும் முறை உருவானது. “தமிழில் மட்டுமே” என்ற பதங்களின் குரல் மங்கத் தொடங்கி, “தமிழிலும்” என்ற புதிய சொல்லாடல் புழக்கத்துக்கு வந்தது. இந்தி உள்ளிட்ட பிறமொழிகளைப் போர்க்குணத்தோடு எதிர்கொள்ளும் தமிழர்கள், ஆங்கிலத்தோடு மட்டும் இரகசியமான நட்பு வைத்திருந்தனர். இதனால் விளைந்த நன்மைகள் பல. வேற்று நாட்டின் இலக்கியப் புதையல்கள் தமிழனின் நூலகத்தில் அவனது மொழியிலேயே மின்னத் தொடங்கின. தமிழனின் இலக்கியங்களை ஆங்கிலம் வழியாக உலகம் புரிந்து கொள்ளும் சூழல் உருவானது. இங்கே மொழிபெயர்ப்பின் தேவையும் பயன்பாடும் விவாதிக்கப்படவேண்டிய கருப்பொருள்களாயின.

Discussion

Topics

More

Suggest a correction or report