NobleBlocks

Research indexJournal article

கவஞர ம.மததவன கவதகளல பணணயச சநதனகள

செல்வி

Bodhi International Journal of Research in Humanities Arts and Science1 Aug 2026Open access

NobleIDark:/48914/w1/20261105/3191BC0ADOI10.64938/bijsi.v10si3.26.aug521

Abstract

இலக்கியங்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடி ஆகும். இக்கால இலக்கியங்களில் ஒன்றான கவிதைகளும் சமூகப்பார்வை உடையவனாகப் காணப்படுகிறது. குறிப்பாக குடும்பத்திலும், சமுதாயத்திலும் பெண்களுக்கு ஏற்படும் வாழ்க்கைச் சிக்கல்களை தெளிவாக எடுத்துக்காட்டி பெண்ணியத்தை வலியுறுத்துகிறது. வேலைத்தளங்களிலும், குடும்பத்திலும் நிலவும்பெண் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் பற்றிய பெண்மையின் உணர்வு நிலைகளை மாற்றுவதற்காக உணர்வுப்பூர்வமாக ஆண்களும், பெண்களும் எடுக்கும் நடவடிக்கையே பெண்ணியமாகும் என்கிறார் வேததத்தா என்ற பெண்ணியவாதி. பெண் அடக்குமுறைக்கான காரணங்களைக் கண்டறிந்து தீர்வு காண்பது, தன்னம்பிக்கை ஊட்டுவது, அவலங்களை களைவது, அடிமைத்தனத்தை அழிப்பது, பாலியல் வன்முறை, வரதட்சணைக் கொடுமை, போன்றவற்றை தகர்த்தெறியப் பாடுப்படுவது என்பன படைப்பாளிகளின் நோக்கமாகும். அவ்வரிசையில் மு. மேத்தா அவர்கள் பெண்களின் விடுதலை, கல்வி மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு உரிய மரியாதை அளித்தல், அவர்தம் பாதுகாப்பு, ஆளுமைதிறன், சமூக கட்டுப்பாடுகளுக்கு எதிரான புரட்சிக்கரமான கருத்துக்களை தம் கவிதைகளில் முன் வைத்தவர். பெண்கள் ஆண்களுக்கு சமமாக கல்விக் பெற்று, சமூகத்தில் தன்னை நிலை நிறுத்த வேண்டும் எனவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலியல் சீண்டல்களையும் குறிப்பாக கோயில்கள் போன்ற புனித இடங்களிலும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதையும்,, பெண்களை வெறும் அழகுப் பொருளாக பார்க்காமல் தனித்திறன், பலம் மற்றும் அவர்தம் விருப்பங்களையும், தங்களுக்கான உரிமைகளை பெண்கள் உணர்ந்து சமூக கட்டுப்பாடுகளை உடைத்து வெளியே வர வேண்டும். பெண்களை மதித்து மரியாதை வழங்குவதோடு பெண் கல்வியை ஊக்குவித்து சமத்துவமான மற்றும் கண்ணியமான சமூகத்தை கட்டமைக்க வேண்டும் என்ற பெண்ணிய நோக்கினை வலியுறுத்தியவர் மு மேத்தா. சமுதாயத்தில் ஆணுக்கு இணையான உரிமை எக்காலத்தும், எச்சூழலிலும், எப்பருவத்திலும் ஆணுக்கு நிகரான மதிப்பு, தன்னம்பிக்கையுடன் தன் காலில் நின்று எதனையும் எதிர்கொண்டு தன் இகழ்வகற்றி, முன்னேறுதல் பெண்களை இழிவுபடுத்தும் அனைத்தையும் புறக்கணித்து, அவற்றை வேரோடு களைதல் ஆகியவற்றை தம் கவிதைகளில் வலியுறுத்தியவர். இன்றைய காலத்தில் பெண்கள் போகப் பொருளாகவும், இன்ப நுகழ்ச்சிக்கு மட்டுமே உரியவளாகும் நடத்தப்படுகின்றனர். காதலில் ஈடுபடுகின்றனர். ஆண் ஆசை வார்த்தைகளால் பெண்ணின் மனதில் இடம் பெற்று, இதன் அடிப்படையில் பாலியலில் ஈடுபட்டு விட்டு, ஆண் சென்று விடுகிறான். இதனை கண்ணீர் பூக்கள் (பக்கம் 61) “வாலிபத்தின் பூங்கொத்தில் வருடல்கள் தாலி கட்டும் முன்பு சில தரிசனங்கள் வேலியிலா இளநிலத்தில் விதைகள்” கழுத்தில் தாலி இல்லாமல் வயிற்றில் குழந்தையைச் சுமந்து பெற்றெடுத்துப் பின் அக்குழந்தையை வளர்க்க விரும்பினாலும், முடியாத நிலையில் அக்குழந்தை குப்பைத்தொட்டியில் தூக்கி எறியப்படுவதையும், “தூக்கி எறிந்து விட்ட துயரக்குரல் கேட்கும் தொடுவானில் கட்ட விழந்த தொட்டிலோ? புதைக்குழியோ?” (கண்ணீர்ப்பூக்கள் பக்க எண் 62) இங்ஙனமாக பெண்கள் படக்கூடிய, பெண்களுக்கு ஏற்படக்கூடிய பாலியல் கொடுமையை தன்னுடைய கவிதைகளின் வழி சாடுகிறார். பெண்களுக்கு திருமணம் என்ற நிகழ்ச்சி மிக முக்கியமானதாகும். பெண்களை அடிமைப்படுத்தும் கொடுமை. வரதட்சணைக் கொடுமை, பெண்ணின் பெருமை வஞ்சிக்கப்படும் நிலை, பெண்களின் முன்னேற்றம் மற்றும் மு.மேத்தா அவர் தம் கவிதைகளில் காணலாகும் பெண்ணியச் சிந்தனைகளையும், பெண் அடக்குமுறைக்கான காரணங்களையும் கண்டறிந்து நடைமுறையில் அடக்குமுறையற்ற அமைப்பு உருவாக தம் கவிதைகளின் வழி எங்ஙனம் அதனை கையாண்டு உள்ளார் என்பதை ஆராய்வதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

Discussion

More

Suggest a correction or report