NobleBlocks

Research indexJournal article

தன மழ பசம பணகள

மேரி, மீனாட்சி

Bodhi International Journal of Research in Humanities Arts and Science1 Aug 2026Open access

NobleIDark:/48914/w1/20261105/B8E8D055DOI10.64938/bijsi.v10si3.26.aug518

Abstract

கால மாற்றங்களுக்கு ஏற்ப சமூக அமைப்பும் மாறி வருகிறது. சமுதாயத்தில் பெண்களிடையே பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்றைய தகவல் தொழில்நுட்பத்தின் பயனால் பெண்கள் பல்வேறு தளங்களில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் கடமைகளும், உரிமைகளும் சமூக அமைப்பை ஒட்டியே அமைகின்றன. ஆணுக்குப் பெண் நிகர் கூறிக்கொண்டாலும் நடைமுறை நிகழ்வுகள் இன்னும் முற்றிலும் மாறிடவில்லை. குடும்ப அமைப்பும், சமூக அமைப்பும் அவளுடைய உரிமைகளையும், உணர்வுகளையும் கட்டுப்படுத்துகின்றன. ஓரறிவு முதல் ஐந்தறிவு கொண்ட உயிரினம் வரை தன்னளவில் உரிமை பெற்று வாழ விரும்புகின்றன. மனித இனத்தில் ஆண் பெற்றிருக்கும் உரிமை பெண்ணுக்கும் உண்டு. ஆனால் மனித இனத்தின் வரலாறு பெரும்பாலும் ஆண்களின் வரலாறாகவே உள்ளது. ஆண்களின் போர், வீரம், கல்வி, கொடைச் சிறப்பு, ஆட்சி சிறப்பு, உயர் பண்புகள் ஆகியவை எழுதப்பட்டுள்ளன. பெண்ணினத்தை பற்றியும், அவர்களின் வரலாறு பற்றியும் பெரியதாக சொல்லப்படாமல் விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘Feminism’ என்ற ஆங்கிலச் சொல் ‘Femina’ என்ற இலத்தீன் சொல்லிருந்து வந்ததாகும். ‘Femina’ என்ற சொல்லுக்குப் பெண்ணிய குணாதிசயங்களைக் கொண்டது என்பது பொருளாகும். இச்சொல் முதலில் பெண்களின் பாலியல் குணாதிசயங்களைக் குறிப்பிடவே வழங்கப்பட்டது. பின்பு, பெண்களின் உரிமைகளைப் பேசுவதற்காக எடுத்தாளப்பட்டது. பெண்ணியம் என்பது ஆணிற்கு இணையான சுதந்திரத்தை அடைவது மட்டும் ஆகும். ஆனால், சிலர் ஆணினத்தை அடக்கி ஆள்வது அல்லது ஆண் சமுதாயத்தை முடக்கிப் போடுவது என எண்ணுகின்றனர். இது முற்றிலும் தவறே. பெண்கள் தனக்கு கிடைக்காத சுதந்திரத்தையோ அல்லது தவறவிட்ட உரிமையையோ மீட்டெடுப்பதே பெண்ணியம் ஆகும். பெண்ணினத்தைப் பெற முயல்வது போராட்ட குணம் அல்ல. அது ஓர் உரிமைக் குரலே ஆகும். தனக்கான உரிமைகளை தானே போராடி பெற்றுக் கொள்கின்றாள். உரிமை என்பது தனி மனிதனின் அடையாளம். இந்நாட்டில் மனிதர்கள் ஆண், பெண் என்ற பாகுபாட்டைப் பார்ப்பதினால், ஆண்களுக்கான உரிமைகள் வேறு எனவும், பெண்களுக்கான உரிமைகள் வேறு எனவும் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. சமநிலை என்ற உணர்வு மனிதர்களுக்கு இருந்தால் பெண்களுக்கான உரிமைகளை பெண்கள் எவ்வித கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாக பெறுவார்கள். இத்தகைய உரிமைகளை எழுத்துரிமை மூலம் எழுத முற்பட்ட பெண்கள் நவீன இலக்கியப் பெண் படைப்பாளிகள் என்கிறனர். இவர்கள் தங்களின் எழுத்துக்கள் மூலம் உணர்ச்சிகளையும், ஏக்கங்களையும், அவலங்களையும், பண்பாட்டில் பெண்களின் சிக்கல்களையும் கவிதை, கட்டுரை, நாவல், புதினம் என பல்வேறு தளங்களில் வெளிப்படுத்தி உள்ளனர். இக்கட்டுரையானது தன் மொழி பேசும் பெண்கள் என்ற தலைப்பில் ஆராய முற்படுகிறது.

Discussion

More

Suggest a correction or report